

தமிழ்நாடு பாடநூல் கழகம் என்பது தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை நடைமுறைப்படுத் துவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:
2014-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதியிட்ட பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 34-ன் படி, 2013-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியில் இருந்து தமிழ்நாடு பாடநூல் கழகம் என்பது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதை நடைமுறைப்படுத்துவதற்காக 1967-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தடுக்கும்) சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இந்த நோக்கத்துக்காக இச்சட்டத்தில் திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.