Published : 26 Apr 2018 03:03 PM
Last Updated : 26 Apr 2018 03:03 PM

குட்கா வழக்கில் குற்றவாளி என நிரூபணமானால் மட்டுமே விஜயபாஸ்கர் பதவி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

 குட்கா வழக்கின் சிபிஐ விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்வது குறித்து கேள்வி எழுப்ப முடியும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றியதால் தமிழக அரசுக்கு பின்னடைவு இல்லை. குட்கா வழக்கில் குற்றவாளி என நிரூபணமானால் மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகல் பற்றி கேள்வி எழுப்பலாம்.

கத்தரிக்காய் முற்றிப்போய் சந்தைக்கு வந்துள்ளது போல் டிடிவி தினகரன் - திவாகரன் மோதல் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தம்மை ஒதுக்கிவைத்த உண்மையை தினகரனே இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x