

திருப்போரூர்: தமிழகத்தின் முன்னாள் டிஜிபியான ராஜேஷ்தாஸ் கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தனது பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். அவரது மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் ஆன்லைன் மூலம் கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இதில், தனது முன்னாள் கணவர் ராஜேஷ்தாஸ், அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கேளம்பாக்கம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ்தாஸ், 10 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ராஜேஷ்தாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். திருப்போரூர் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.