Published : 25 May 2024 06:05 AM
Last Updated : 25 May 2024 06:05 AM
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 68,927 பேருக்கு 8 கிராம்தங்க நாணயங்களுடன் நிதி உதவி உட்பட 1.26 லட்சம் மகளிருக்கு ரூ.1,047 கோடியில் திருமண நிதியுதவி வழங்கி சாதனை சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்டது. தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகள் உட்பட ரூ.410.73 கோடி நிவாரணமும் முதல்வர் வழங்கினார்.
பெற்றோரை இழந்து உறவினர், பாதுகாவலர் அரவணைப்பில் வளரும் 365 குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் பராமரிப்பு தொகையாக ரூ.2.35 கோடி வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்துபயணத் திட்டம் மூலம் பயணிகள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்னர்.
மேலும், கடந்த 2022 ஆகஸ்ட்டில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தில், இதுவரை 2.73 லட்சம் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான ஒய்வுவயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் வைப்பறையுடன் கூடிய 1,285 சமையலறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சமூக நலத்துறை மூலம் 19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. முதல்வர் உத்தரவுப்படி, திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரத்தில் ரூ.31.07 கோடியில் 688 மகளிர் பயன்பெறும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு, இதில், 259 பேர் பயன்பெறுகின்றனர்.
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், 1.43 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வு தொகை 2021-22-ல் வழங்கப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் வரை 7,343 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருமண நிதியுதவி திட்டத்தில், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26,637 மகளிருக்கு ரூ.1,047 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 68,927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டு, ரூ.236 கோடிநிதியில் 1,482 பேர் பயன்பெறுகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டத்தின் கீழ் சத்துமாவு வழங்கப்படுகிறது. ரூ.18.68கோடியில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்புடன் வாழ்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT