Published : 24 May 2024 05:02 AM
Last Updated : 24 May 2024 05:02 AM

நீதிமன்றத்தில் ஜாமீன் ரத்து: பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் 8 பேர் என்ஐஏவிடம் சரண்

சென்னை: சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’(பிஎஃப்ஐ) அமைப்புக்கு மத்திய அரசு கடந்த 2022 செப்டம்பர் மாதம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் 8 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இதையடுத்து, 8 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ மேல்முறையீடு செய்தது. கோடைகால விடுமுறை அமர்வில் இந்த மனு மீதான விசாரணை கடந்த 22-ம் தேதி நடந்தது.

அப்போது, இவர்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 8 பேரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேற்று சரணடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x