

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நல்லகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி(56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணா மலையார் கோயிலில் பூசாரியாக இருந்தார். அந்தகோயிலில் தற்போது திருவிழாநடந்து வருகிறது.
இந்நிலையில், திருவிழாவைெயாட்டி நேற்று முன் தினம் 20-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் கோயில் வளாகத்தில் வெட்டப்பட்ட நிலையில், பழனிசாமி உட்பட 5-க்கும்மேற்பட்ட பூசாரிகள் ஆட்டு ரத்தத்தை குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் பழனிசாமிக்குவாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பழனிசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கோபி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.