பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - சென்னை காவல்துறை விசாரணை

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - சென்னை காவல்துறை விசாரணை
Updated on
1 min read

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ (NIA) அலுவலகத்தை தொடர்புகொண்ட மர்ம நபர், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ (NIA) அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்தியில் பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர், அதன்பின் இணைப்பை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார், எதற்காக மிரட்டல் விடுத்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மூன்று தினங்களுக்கு முன்பு குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக அகமதாபாத் சென்ற நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். இந்த நிலையில் தான் தற்போது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in