Published : 22 May 2024 05:40 AM
Last Updated : 22 May 2024 05:40 AM
சென்னை: ஆவின் பால் கொள்முதல் 29 லட்சம் லிட்டராக அதிகரித் துள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று ஆவின் நிறுவன மேலாண்மை இயக்கு நர் வினீத் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினமும் 27 லட்சம் லிட்டருக்கு மேல்பால் கொள்முதல் செய்யப்படு கிறது.
இந்த பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, பல வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
முன்பு, ஆவின் பால் தினசரிகொள்முதல் 40 லட்சம் லிட்டராகஇருந்தது. இப்போது படிப்படியாக குறைந்து 27 லட்சம் லிட்டராக இருக்கிறது. பால் கொள்முதல் குறைந்ததால், ஆவினில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை பாதிக்கும் நிலை உள்ளது.
ஆவின் பால் கொள்முதல் சரிவுக்கு நடைமுறை கொள்கை மற்றும் தனியார் கொள்முதலுக்கு சாதகமான அணுகுமுறையே காரணம் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஆவின் பால் தினசரி கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக உள்ளது. தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவினுக்கு 12 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் பால் அளவு குறைந்துள்ளது.
உற்பத்தியாளர்கள் குறைந்தனர்: ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை 4.80 லட்சத்தில் இருந்து 3.75 லட்சமாக குறைந்துள்ளது. எனவே, கொள் முதலை அதிகரிக்க ஆர்வம் காட்ட வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தவும், மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி, திமுக அரசு, ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இதனால், ஆண்டுக்கு ரூ.300 கோடி வீதம் 3 ஆண்டுகளில் ரூ.900 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஆவின் நிறுவனமேலாண்மை இயக்குநர் வினித் கூறும்போது, ஆவின் பால் கொள்முதல் தற்போது 29 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. மழை காரணமாக, அதிகரித்துள்ளதா அல்லது வேறு காரணமா என்று ஆய்வு செய்கிறோம்.
சில வாரங்களில் ஆவின் பால் கொள்முதல் அதிகரித்து விடும். கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகள், அலுவலர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளிடம் பேசி வருகிறார்கள். எனவே, ஆவின் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT