Published : 09 Aug 2014 09:14 AM
Last Updated : 09 Aug 2014 09:14 AM

வங்கி கணக்கு தொடங்க வந்த பெண்ணை ஏமாற்றி 2 சவரன் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

வங்கி கணக்கு தொடங்க வந்த பெண்ணை ஏமாற்றி 2 சவரன் செயினை பறித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

குரோம்பேட்டை கிழக்கு புதுவை நகரை சேர்ந்தவர் இளவ ரசன். இவரது மகள் சோனாலி(17). இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் புதிதாக கணக்கு தொடங்க வியாழக்கிழமை காலையில் வந்தார்.

அப்போது வங்கியின் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபர், தன்னை வங்கியில் பணிபுரிபவ ராக சோனாலியிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்னர் வங்கி கணக்கு தொடங்குவதற்கான படிவத்தை எடுத்து வந்து அவரே நிரப்பிக் கொடுத்துள்ளார்.

“வங்கி கணக்கு தொடங்கும் போது செயின் அணிந்திருந்தால் அதிகமான பணத்தை கணக்கில் செலுத்த சொல்வார்கள். எனவே செயினை கழற்றி விடு” என்று கூறி சோனாலி அணிந்திருந்த 2 சவரன் செயினை அவர் வாங்கி வைத்துக் கொண்டார்.

பின்னர் சில சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுத்து வரும்படி அருகே உள்ள கடைக்கு சோனாலியை அனுப்பியுள்ளார்.

ஜெராக்ஸ் கடையில் இருந்து திரும்பிய சோனாலி, அந்த நபரை காணாமல் அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து வங்கி அதிகாரியிடம் புகார் கூறினார்.

அவர் குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித் தார். வங்கியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள மோசடி நபரின் புகைப்படத்தை எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறொரு சம்பவம்

தாம்பரம் வினோபா நகரில் வசிப்பவர் திவ்யா(21). கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கிறார்.

வியாழக்கிழமை மாலை இவர் வேளச்சேரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் திவ்யா அணிந் திருந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து சேலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x