

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 63,433 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே 17) முடிவடைகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண் ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 63,433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,078, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 7,106, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்மாறுதலுக்கு 4,039, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 822 என 26,075 விண் ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20,466, முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,308, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்மாறுதலுக்கு 913, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி ஒட்டுமொத்தமாக 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித் துள்ளனர். விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 17) நிறைவு பெறுகிறது. எனவே, ஆசிரியர்கள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.