போதை பொருள் ஒழிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை: தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

போதை பொருள் ஒழிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை: தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து, போதை ஒழிப்பு நடவடிக் கைகளை தீவிரப்படுத்த வேண்டும்என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் பரி மாற்றத்தைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டம்: இதையடுத்து, நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர்மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நட மாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்பட பல துறைகளின் செயலர்கள், தமிழக டிஜிபிசங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற் றனர்.

அப்போது துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் நடமாட்டம், பயன்பாட்டுக்கு எதிரானநடவடிக்கைகளைத் தீவிரப்படுத் தும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.

உயர் நீதிமன்றம் பாராட்டு: தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சென்னைஉயர்நீதிமன்றம் பாராட்டிய நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை மேலும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்தே, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், நீதிமன்றத்தின் பாராட்டு குறித்துதெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டா லின், அதிகாரிகளை பாராட்டினார். அத்துடன், போதைப் பொருள் தடுப்பு அலுவலர்களுக்கு உரியபயிற்சிகளை வழங்கவும் இக்கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தி யுள்ளார்.

மேலும், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in