Published : 16 May 2024 05:27 AM
Last Updated : 16 May 2024 05:27 AM
திருப்போரூர்: திருப்போரூர் பிரணவ மலை செல்லும் வழியில், வள்ளலார் சிந்தனை சீடர் பாலசுப்ரமணி (89) என்பவர் ஆசிரமம் அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சன்மார்க்க தொண்டாற்றி வந்தார்.
வள்ளலார் கொள்கைகளை பரப்பிய மூத்த சன்மார்க்கி யான தன்னை, வேலைக்கார சுவாமிகள் என்று அழைக்கும்படி தன் சார்ந்தவர்களை இவர்கேட்டுக் கொண்டார். அதாவதுவள்ளலாரின் வேலைக்காரன் என,தன்னை அவர் அடையாளப் படுத்திக் கொண்டார். பல ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வெறும் தண்ணீர் மட்டுமே பருகி சன்மார்க்கத் தொண்டாற்றியவர் வேலைக்கார சுவாமிகள் ஆவார்.
வள்ளலார் பிறந்த பூசம் நட்சத்திரமான நேற்று முன்தினம், இவர் உடல்நலக் குறைவால், திருப்போரூர் ஆசிரமத்தில் மறைந்தார். பக்தர்கள் மற்றும் உறவினர்கள் இவர் தங்கியிருந்த இடத்திலேயே, இவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
தொல்லியல் துறை சார்ந்த இடம் என்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொல்லியல் துறை, வருவாய்த் துறை , போலீஸாருக்கு புகார் தெரிவித்தனர்.
தொல்லியல் துறை , வருவாய்த் துறையினர், போலீஸார் அங்குஇவரது உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வடலூரை அடுத்த கருங்குழியில் வெங்கட்என்பவர் இடத்தில் இவரது உடல்அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கருங்குழியில் வள்ளலார் தண்ணீரில் விளக்கு எரித்த இல்லம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT