தமிழக பெண் டிஐஜிக்கள் ரம்யா பாரதி, பொன்னிக்கு மத்திய அரசு பணி

தமிழக பெண் டிஐஜிக்கள் ரம்யா பாரதி, பொன்னிக்கு மத்திய அரசு பணி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 2 பெண் டிஐஜிகளுக்கு மத்திய அரசு பணிகள் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎஸ், ஐஏஎஸ் எனும் இந்திய காவல் பணிகள், இந்திய குடிமை பணிகள் ஆகிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு என இரு வித பணிகளிலும் அரசின் தேவை மற்றும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள்.

அதன்படி, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு செல்ல ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவர்களில் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மற்றும் காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஐஜியாக இருந்த பொன்னி ஆகியோரை மத்திய அரசு பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பணியமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உத்தரவுக்கு தமிழக அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிகிறது. டிஐஜி ரம்யா பாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கும், டிஐஜி பொன்னி மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in