Published : 15 May 2024 05:35 AM
Last Updated : 15 May 2024 05:35 AM

கடற்கரை - தாம்பரம் இடையே மின் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில், பூங்கா ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

முழுமையாக ரத்து: சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை எழும்பூர்-கடற்கரைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x