சின்னநொளம்பூர், பூந்தமல்லி பிரதான சாலை, கணேசபுரம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் , நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் , நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Updated on
1 min read

சென்னை: சின்ன நொளம்பூர், பூந்தமல்லி பிரதான சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கில் கட்டப்படும் பாலங்கள், கணேசபுரம் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144, பூந்தமல்லி பிரதான சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின்கீழ், சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42.71 கோடி மதிப்பில் 245 மீ. நீளம் மற்றும் 20.70 மீ. அகலத்தில் உயர்மட்டப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதே போல், பூந்தமல்லி பிரதான சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடியில் 273 மீ. நீளம் மற்றும் 12 மீ. அகலத்தில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு-45 மற்றும் 71, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ்,ரூ.142 கோடி மதிப்பில் 678 மீ. நீளம் மற்றும் 15.20 மீ. அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார். அப்போது, கட்டப்பட்டுவரும் பாலப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in