Published : 15 May 2024 06:00 AM
Last Updated : 15 May 2024 06:00 AM

மிகப்பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

சென்னை: சென்னை துறைமுகம் மிகப் பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்வது உண்டு. அந்த வகையில், தற்போது வெளிநாட்டில் இருந்து மிகப் பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பல் கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் வந்துள்ளது.

‘ஏபிஎல் பாஸ்டன்’ என்ற அந்த சரக்கு கப்பல் 1.09 லட்சம் டன் எடையும், 328.2 மீட்டர் நீளமும், 14.9 மீட்டர் ஆழமும் கொண்டது. மேலும், இந்தக் கப்பலில் 9,326 டன் எடையுள்ள சரக்குகள் கன்டெய்னர் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2017 ஜனவரி 1-ம் தேதி 14.8 மீட்டர் ஆழம் கொண்ட மிகப் பெரிய சரக்கு கப்பல் கையாளப்பட்டது. அதன் பிறகு, இதைவிட அதிக ஆழம் கொண்ட இந்த சரக்கு கப்பல் தற்போது கையாளப்பட்டுள்ளது.

இதற்காக, துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், சரக்குமுனைய ஆபரேட்டர்கள், கப்பல் ஏஜென்ட் ஆகியோருக்கு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x