அரசு திட்டங்களால் பயன் பெற வங்கி சேமிப்பு கணக்கு அவசியம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் பேச்சு

அரசு திட்டங்களால் பயன் பெற வங்கி  சேமிப்பு கணக்கு அவசியம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் பேச்சு
Updated on
1 min read

வீடு தோறும் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் அலகாபாத் வங்கியின் அண்ணா சாலை கிளையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஆர்.எல்.கே.ராவ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அவர் கூறும்போது, “தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக போய் சேர வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் இருக்க வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் கிடைக்க அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்குங்கள்” என்றார்.

அலகாபாத் வங்கி அண்ணாசாலை கிளையின் உதவி பொது மேலாளர் கே.ஹெச்.வெங்கடேஸ்வரன் முகாமை தொடங்கிவைத்து பேசும்போது, “சிறப்பு முகாமின்போது சென்னை மண்டலத்தில் 15 ஆயிரம் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேமிப்புக் கணக்குகளை தொடங்கி அரசு திட்டங்களால் பயன் பெற வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in