தனிச் செயலரின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தனிச் செயலரின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்
Updated on
1 min read

நாமக்கல்: தமிழக முதல்வர் தனிச் செயலாளர் தந்தை உடல் நல குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து வெண்ணந்தூரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், தனிச் செயலாளர் தந்தையின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் ர.தினேஷ்குமார். இவர் தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக உள்ளார். இவரது தந்தை டி.வி.ரவி (63) நேற்று முன்தினம் (மே 12) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான மூலம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக வெண்ணந்தூரில் உள்ள தினேஷ் குமார் இல்லத்துக்கு வந்தார்.

தொடர்ந்து தினேஷ்குமார் தந்தை ரவி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும், கனிமொழி எம்பி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நிதித் துறை செயலாளர் உதயச் சந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் வருகையை ஒட்டி சேலம் முதல் வெண்ணந்தூர் வரை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ட்ரோன்கள் திறக்கவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in