Published : 14 May 2024 05:32 AM
Last Updated : 14 May 2024 05:32 AM

இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன்? - தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை: பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓசூரை சேர்ந்த பி.ஜெயசிம்மன் என்பவர் 2024 மக்களவை தேர்தலில் யாருக்கு, எதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

கடந்த மார்ச் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை கருத்தில் கொண்டு இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பழனிசாமி தரப்பில்அளித்த ஆவணங்களை பதிவுசெய்து கொண்டதாகவும், அதுநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதுஎன்றும் தேர்தல் ஆணையம்கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவுபிறப்பித்துள்ளது. அந்த உத்தரவேதொடர்வதாக தேர்தல் ஆணையம்பதில் அளித்துள்ளது.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெங்களூரு வா.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட என்னுடைய வழக்கில் நடவடிக்கை எடுக்க நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வந்த தீர்ப்பை ஏன் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது என்பது புரியவில்லை. அதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவும் நேரடியாக இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய செயலாளரின் உத்தரவின்படி முந்தைய நிலையே தொடர்கிறது என்று பதில் அளித்து இருப்பதும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

தேர்தல் ஆணையம் சரியாக கவனம் செலுத்தாமல் அவசர அவசரமாக தவறான முடிவுகளை எடுத்துள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x