Published : 13 Aug 2014 10:29 AM
Last Updated : 13 Aug 2014 10:29 AM

சுயஉதவிக் குழுக்களுக்கு 25 ஷேர் ஆட்டோக்கள்: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

விருதுநகர், சேலம், திருவண்ணா மலை மாவட்டங்களில் போக்கு வரத்து வசதி குறைவாக உள்ள 100 கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.27 கோடியில் 25 ஷேர் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் பொதுத் துறை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பின்தங்கிய வட்டாரங்களான விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, வெம்பக் கோட்டை, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம், திருவண் ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ள 100 கிராமங்களில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.27 கோடியில் 25 ஷேர் ஆட்டோக்கள் வழங்கப்படும்.

சேலம் மாவட்டம் ஏற்காடு, அயோத்தியாபட்டினம், பெத்த நாயக்கன்பாளையம், திருவண் ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஆகிய பின்தங்கிய வட்டாரங்களில் விவசாயிகள் குழுக்கள் மூலம் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கவும், சிறுதானியங்கள் அடிப்ப டையிலான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கவும் ரூ.1.47 கோடியில் உபகரணங்கள் வழங்கப்படும்.

சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடி, எஸ்.புதூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, சேடப்பட்டி, தி.கல்லுப்பட்டி ஆகிய வட்டாரங்களில் மகளிர் சுயதொழிலை மேம்படுத்த அப்பகுதியில் 6 ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.3.13 கோடியில் அமைக்கப்படும். இதனால் அப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர், பரமக்குடி, போகலூர் வட்டாரங்களில் 10, 12-ம் வகுப்பு பயிலும் திறமை மிக்க 500 மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர ரூ.25 லட்சத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் 17 சார் கருவூலங்களுக்கு ரூ.11.31 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையை வலுப்படுத்த சேலத்தில் ஒரு புதிய மண்டல இணை இயக்குனர் அலுவலகம் உருவாக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பணப் பயன்களை மின்னணு முறையில் வழங்க மென்பொருள் மற்றும் இதர தொடர்புடைய செலவினங் களுக்கென முதல்கட்டமாக ரூ.30 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x