பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா: கன்றுடன் கறவை பசுக்களை வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்

பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா: கன்றுடன் கறவை பசுக்களை வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 70-வது பிறந்தநாள் விழாவை சென்னையில் நேற்று கன்றுடன் கூடிய கறவை பசுக்களை ஏழை விவசாயிகளுக்கு வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சேலத்தில் நேற்று பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தியாகராயநகரில் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், கட்சியின் இளைஞரணி இணை செயலாளர் வி.சுனில் பங்கேற்று, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 7 பேருக்கு கன்று குட்டிகளுடன் கூடிய கறவை பசுக்களை வழங்கினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவிவெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்த நன்னாளில் நல்ல உடல் நலத்துடன், மகிழ்ச்சியாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஆகியோரும் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனது பிறந்த நாளில்தன்னை வாழ்த்திய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in