மதுரை, ராஜபாளையம் வழியாக தாம்பரம் - கொச்சுவேலி கோடை சிறப்பு ரயில்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: ராஜபாளையம் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பு: கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06035) மே 16 முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங் கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும், என தெற்கு ரயில்வே தெரிவித்துள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in