Published : 11 May 2024 12:09 PM
Last Updated : 11 May 2024 12:09 PM

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு: விண்ணப்பிக்க ஜூன்.1 கடைசி

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வை எழுத இயலாமல் போனவர்கள் மீண்டும் எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பு பின்வருமாறு: நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்களிடமிருந்தும்.

பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத/வருகைப்புரியாத தனித்தேர்வர்களும் 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை) வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 1100 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் (Service Centres) வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சிபெறாதவர்கள் / வருகை புரியாதவர்கள் ஆகியோர் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர 16:052024 முதல் 24.052024 (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரையிலான நாட்களில் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு சென்று, கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ள வேண்டும். இவ்வனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.

மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செய்முறைத் தேர்விற்கு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்று பின்னர் தனித் தேர்வர்கள் விண்ணப்பம் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க மேற்காண் நாட்களில் சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறைத் தேர்வு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Hall Ticket)பதிவிறக்கம் செய்ய இயலும்

செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service Centres) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம்

1 தேர்வுக் கட்டணம் ரூ.125
2 ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.70
மொத்த கட்டணம் ரூ.195

தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் / பள்ளியில் பணமாகச் செலுத்த வேண்டும்.

சிறப்பு அனுமதித்திட்டம்: 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை) வரையிலான நாட்களில் ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 03062024 (திங்கட்கிழமை) மற்றும் 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500/- (2023 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சிப்பெறாத / வருகைப்புரியாத மாணவர்களுக்கு இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது)

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்: ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தேர்வுக்கால அட்டவணை: பத்தாம் வகுப்பு ஜூலை-2024 துணைத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை :

\

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x