கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்டதனக்கும், விசிக பொதுச்செயலா ளர் ரவிக்குமாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மைக்காக கமல்ஹாசனுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து, தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல்நிலவரம் குறித்து இரு கட்சி தலைவர்களும் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது, இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in