

சென்னை: ‘தி டிமென்ஷியா கேர் ஃபவுண் டேஷன்’ சார்பில் சிறார்கள் மற்றும் முதியவர்களுக்கான 10 நாட்கள் கோடைகால சிறப்பு முகாம் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) மருத்துவமனையில் நடைபெற்றது.
மே 1 முதல் 10-ம் தேதி வரைநடைபெற்ற முகாமில் சிறார்கள்,முதியவர்கள் 35-க்கும் மேற்பட் டோர் பங்கேற்ற நிலையில், இருவருக்கும் இடையே புரிதல், இணக்கம், நல்லுறவு ஏற்படுத்தப் பட்டது.
பல்வேறு பயிற்சிகள்: மேலும், கியூரி மருத்துவமனை, உதவி, ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ தொண்டு நிறுவனங்கள் மற்றும்பேம்புலா நிறுவனம் சார்பில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற சிறார்கள் மற்றும் முதியவர்களுக்கு பூ கட்டுதல், ஓவியம் தீட்டுதல், கோலம் போடுதல், நடனம், தையல், கராத்தே, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அதேபோல், பரமபதம், ஆடுபுலிஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடும் முறை குறித்தும். முதியவர்களுக்கு செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல்தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவது, மோசடிகளில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விளக்கப்பட்டது.
முதியோருக்கு மரியாதை: கூட்டுக்குடும்பம் என்ற முறை மாறிவிட்டதால், சிறார்களுக்கும், முதியவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில், இந்த 10 நாட்கள் நடந்த முகாமில் இருவருக்கும் இடையேநல்ல புரிதல் ஏற்பட்டது. டிமென்ஷி யாவால் (மறதி) பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களை பாசத்துடன் கவனித்து கொள்வது குறித்து சிறார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கியூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் ‘தி டிமென்ஷியா கேர் ஃபவுண்டேஷனில்’ டிமென்ஷி யாவால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு ‘டே கேர்’ மற்றும்உள்நோயாளியாகவும் அனுமதி யாகி சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9344257901, 044-24964555 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.