Published : 11 May 2024 05:48 AM
Last Updated : 11 May 2024 05:48 AM
மதுரை: வீட்டு அடமானக் கடனை திரும்ப செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை திரும்ப வழங்க மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இந்திராணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: வாடிப்பட்டி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றேன். கடனை செலுத்திய பிறகும் வீட்டின் ஆவணங்களை வழங்க மறுக்கின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் செலுத்திய கடன் தொகையை, வாடிப்பட்டி கூட்டுறவு வீட்டுவசதி சங்கச் செயலர் தவறாகப் பயன் படுத்தியுள்ளார்.
எனவே, வாடிப்பட்டி கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர், துணைப் பதிவாளர் வழியாக கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக இயக்குநருக்கு மனுதாரரின் கோரிக்கை தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில், மனுதாரரின் அசல் ஆவணங்களை அவரிடம் 8 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT