சாமியாரிடம் நேரில் ஆசிபெற்ற மத்திய அமைச்சர்

சாமியாரிடம் நேரில் ஆசிபெற்ற மத்திய அமைச்சர்

Published on

பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கோவண சித்தர் என்கிற ராஜ்குமார் சாமியாரை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் பிறந்து மன்னார்குடியில் வசித்துவரும் நிர்வாண சாமியாரின் சீடராக இருந்து, கடந்த 5 ஆண்டுகளாக கார்காவயல் கிராமத்தில் கோயில் கட்டி வசித்து வருகிறார் ராஜ்குமார் என்கிற கோவண சாமியார். தன்னை சந்திக்க வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை பரிவட்டம் கட்டி, மலர் கிரீடம் வைத்து சாமியார் ராஜ்குமார் வரவேற்றார்.

சமீபகாலமாக இந்தப் பகுதியில் பிரபலமாகிவரும் ராஜ்குமார் சாமியாரை சந்திக்க மத்திய இணை அமைச்சர் வந்தது இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை வருகையின் நோக்கம் மற்றும் தமிழக மீனவர் கள் பிரச்சினை குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இது தனது தனிப்பட்ட பயணம் என்று கூறிவிட்டு புறப் பட்டுச் சென்று விட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in