

காரைக்கால்: காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடியின் நாகரிகமற்ற, அவதூறு பேச்சுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடுநிலையாக இல்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் இயக்கம் நடத்தப்படும் என்றார்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம், மாநில குழு உறுப்பினர் அ.வின்சென்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.