தண்டனையை ரத்து செய்ய கோரி பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்றத்தில் மனு

தண்டனையை ரத்து செய்ய கோரி பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை ரத்து செய்யக் கோரியும், அதுவரை இடைக்கால ஜாமின் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் அவர் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in