Published : 08 May 2024 05:10 AM
Last Updated : 08 May 2024 05:10 AM
ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட விரியன்கோவில் பீட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி விழுந்ததில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன்கோவில் பீட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி விழுந்ததில் காட்டுத்தீ பரவியது. இரவில் காற்றின் வேகம்காரணமாக காட்டுத்தீ 2 கி.மீ. சுற்றளவுக்குப் பரவியது. நேற்று முன்தினம்இரவு முதல் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலி, சிறுத்தை, யானை, மான், காட்டுமாடு, வரையாடு, சாம்பல் நிற அணில்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வன விலங்குகள் மற்றும் மூலிகைத் தாவரங்கள், நூற்றாண்டு பழமை வாய்ந்த அரிய வகை மரங்கள் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால், வனவிலங்குகள் மற்றும் அரிய வகை மரங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT