எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி காவல் நிலையங்களுக்கு சென்று காவல் ஆணையர் ஆய்வு

எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி காவல் நிலையங்களுக்கு சென்று காவல் ஆணையர் ஆய்வு
Updated on
1 min read

காவல் நிலையங்களின் செயல்பாடு மற்றும் காவலர்களின் செயல்பாடு குறித்து எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி ஆகிய 3 காவல் நிலையங்களிலும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புகார்தாரர்கள் அளிக்கும் மனுக்களை காவல் ஆய்வாளர்கள் கட்டாயம் வாங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் புகாரை வாங்காமல் இருக்கக் கூடாது. மேலும், உரிய விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என ஏற்கெனவே சென்னையில் உள்ள 135 காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர் ஆகிய 3 காவல் நிலையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். காவலர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா, காவல் நிலையம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா, புகார்தாரர்களிடம் எவ்வாறு விசாரணை நடத்தப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in