காஞ்சிபுரம் | போக்குவரத்து சிக்னல் அருகே பசுமை பந்தல்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்காக அமைத்துள்ள பசுமை பந்தல்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்காக அமைத்துள்ள பசுமை பந்தல்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. நண்பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது வெப்ப அலை வீசுகிறது. வெயில் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக போக்குவரத்து போலீஸார் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிக்னல் சந்திப்பில் பசுமை நிழற்பந்தல் அமைத்துள்ளனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் கிடைக்கிறது.

காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியிருந்து கச்சபேசுவரர் கோயில் செல்லும் சந்திப்பு, மூங்கில் மண்டபத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை சந்திப்பு, கச்சபேசுவரர் கோயில் முதல் நகர கூட்டுறவு வங்கி வரை என பேருந்து நிலைய சிக்னல் அருகில் 3 இடங்களில் இந்த பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து சிக்னல் விளக்கு வழிகாட்டும் வரை அந்த இடத்தில் நின்று இளைப்பாறி செல்கின்றனர். போக்குவரத்து போலீஸாரின் இந்தச் செயலுக்கு பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in