சிவில் நீதிபதிகள் 104 பேர் இடமாற்றம்

சிவில் நீதிபதிகள் 104 பேர் இடமாற்றம்
Updated on
1 min read

சென்னை: உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம்.ஜோதிராமன் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூரில் குற்றவியல் நடுவராக பணிபுரிந்து வந்து ஜி.பாரதி பிரபா, ஊட்டி கூடுதல் மகளிர் நீதிமன்ற குற்றவியல் நடுவராகவும், சென்னை உயர் நீதிமன்ற தமி்ழ் சட்ட இதழ் உதவி ஆசிரியர் டி.நிஷா, சிதம்பரம் குற்றவியல் நடுவராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரக்கோணம் குற்றவியல் நடுவர் எம்.ஷகீரா பானு, எழும்பூர் பெருநகர கூடுதல் மகளிர் நீதிமன்ற குற்றவியல் நடுவராகவும், வேலூர் முதன்மை மாவட்ட முன்சீப் கே.மலர்கொடி, திருவொற்றியூர் மாவட்ட முன்சீப்பாகவும், போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் ஜி.கே.வேலுமயில், சேந்தமங்கலம் குற்றவியல் நடுவராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் 104 குற்றவியல் நடுவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in