

திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில், ஜூனியர் மாணவியை `ராகிங்’ செய்து தாக்கியதாக, சீனியர் மாணவியர் 13 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
தூத்துக்குடி, ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் மேன்ஸிதேவி (19). திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில், 2-ம் ஆண்டு படிக்கிறார். இவரை சில நாட்களுக்கு முன் 3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவியர் `ராகிங்’ தொந்தரவுக்கு ஆளாக்கினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம், மாணவி மேன்ஸிதேவி புகார் செய்தார். வெள்ளிக்கிழமை மீண்டும் அவரிடம் தகராறு செய்த மாணவியர், அவரிடமிருந்த அலைபேசியை பறித்து தாக்கினர். இதில், காயமடைந்த மேன்ஸிதேவி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாளையங்கோட்டை போலீஸார் விசாரித்து, பேச்சியம்மாள், புஷ்பலதா, சுகிர்தா உள்ளிட்ட 13 மாணவியர் மீது `ராகிங்’ வழக்கு பதிவு செய்துள்ளனர்.