நீட் தேர்வால் சிறந்த மருத்துவர்கள் உருவெடுப்பர்: அண்ணாமலை நம்பிக்கை

அண்ணாமலை
அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வால் தமிழகத்தில் இருந்து தலைசிறந்த மருத்துவர்கள் உருவெடுப்பார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது ஆண்டு தோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி, வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார். நீட் தேர்வு மூலம், நமது குழந்தைகள் தலை சிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in