நீட் தேர்வு நிறைவு | இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து

இடம்: மதுரை | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
இடம்: மதுரை | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாகவும் இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறினர். சில மாணவர்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 24 மையங்களில் 11,142 மாணவர்கள் தேர்வெழுதினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தேர்வு மையங்களில் 5,176 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். அதேபோல், மதுரை மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 9,312 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். முன்னதாக, தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஏற்கெனவே தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in