தன்பாலின சேர்க்கையாளர் ஆதரவு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை பெருநகர காவல் துறையின் சமூக வலைதள பக்கத்தில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக இன்று செய்தி வந்துள்ளது. கற்பு நெறி, குடும்ப வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் என உலகத்துக்கே உதாரணமாக திகழும் தமிழகத்தில் இந்த செய்தி பல பேரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்து மக்களை நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டிய காவல்துறை எல்ஜிபிடிகியூ மக்களின் உரிமைக்காக போராடுகிறேன் என்ற பெயரில் செயல்படுவது நமது பாரம்பரிய சமூகத்துக்கு ஒவ்வாத செயலாகும்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கும் வேளையில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான காவல் துறையின் பிரச்சாரம் மேலும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும்.

தமிழின பண்பாட்டை சீரழிக்கும் இந்த தன்பாலின சேர்க்கையாளர் ஆதரவு பிரச்சாரத்தை காவல் துறையும் தமிழக அரசும் உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in