மதிமுக அசைக்க முடியாத அரசியல் சக்தியாகும்: தொண்டர்களுக்கு வைகோ கடிதம்

மதிமுக அசைக்க முடியாத அரசியல் சக்தியாகும்: தொண்டர்களுக்கு வைகோ கடிதம்
Updated on
1 min read

சென்னை: மதிமுக 31-ம் ஆண்டு தொடக்கநாளையொட்டி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் வைகோ எழுதிய கடிதம்:

1994 மே 6-ம் தேதி தொடங்கப்பட்ட மதிமுக 31-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் நேர்மையோடும், பொதுவாழ்வில் தூய்மையோடும், லட்சியத்தில் உறுதியோடும் மதிமுக தனது லட்சிய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் அரசியலையும் தாண்டி தமிழக முன்னேற்றத்துக்காக மதிமுக கண்ட களங்கள் ஏராளம். இவற்றையெல்லாம் வரலாறு வரவு வைத்துக் கொண்டேதான் இருக்கும். ஏப் 19-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மதிமுக திருச்சி மக்களவை தொகுதியில் பெரும்பான்மையான வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

அந்த வகையில் ஜூன் 4-ம் தேதி கழகத்தின் வெற்றிச் செய்தியைநாம் கேட்கப் போகிறோம். அதேபோல திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகளும், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும். இந்நிலையில் மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மேலும் நம்பிக்கை வெளிச்சத்தை அளிக்க இருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் மதிமுக அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை நிலைநாட்டுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in