

சென்னை: லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்து, மீண்டும் காலை 5.35 மணிக்கு லண்டன் புறப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய 314 பயணிகள் காத்திருந்தனர்.
ஆனால், லண்டனில் 294 பயணிகளுடன் 6 மணி நேரம் தாமதமாக விமானம் காலை 9.30 மணிக்கு சென்னை வந்தது. பின்னர், அந்த விமானம் 6 மணி நேரம் தாமதமாக பகல் 11.30 மணிக்கு லண்டன் புறப்பட்டது.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.