Published : 03 May 2024 06:12 AM
Last Updated : 03 May 2024 06:12 AM
சென்னை: கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்று அடையாளப்படுத்தியாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத் துறைநடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, ‘ஸ்கேன்’ செய்து கருவில் இருப்பது, ஆணா,பெண்ணா என அம்மருத்துவமனை தெரியப்படுத்தி வந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, மருத்துவம், ஊரகநலப் பணிகள் இயக்ககத்தின் (டிஎம்எஸ்) இணைஇயக்குநர் இளங்கோ தலைமையிலான குழுவினர் நேற்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனையில் 3‘ஸ்கேன்’ கருவிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் ஆய்வின்போது 2 கருவிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன என்றும்,மற்றொரு கருவி காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், சில மருத்துவபரிசோதனை அறிக்கைகளிலும் முரண்பாடு இருப்பதுகண்டறியப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள்கூறுகையில், ``மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சில குறைபாடுகள், தவறுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சட்டத்துக்கு புறம்பாக, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக, அநதமருத்துவமனைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை மற்றும்ஆவணங்களை ஆராய்ந்த பிறகு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT