வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதர் திறந்து வைத்தார்

வேலூர் விஐடி பல்கலை.யில் தூய்மையான சூழலுக்கான மையத்தை திறந்துவைத்துப் பார்வையிட்ட அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ். உடன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.
வேலூர் விஐடி பல்கலை.யில் தூய்மையான சூழலுக்கான மையத்தை திறந்துவைத்துப் பார்வையிட்ட அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ். உடன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மையத்தை, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் நேற்று திறந்துவைத்தார்.

அவர் பேசும்போது, ‘அமெரிக்கதுணைத் தூதரகம், விஐடி பல்கலைக்கழகத்துடன் நீண்ட உறவைக் கொண்டுள்ளது. இதுகல்வியைக் கட்டமைக்க மட்டுமின்றி, இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இதன் மூலம் பல நற்செயல்கள் புரிய வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க-இந்தியா உறவைஅடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் நாம் வெற்றி பெறுவோம்.அனைவரும் தங்களுடைய முன்முடிவுகள், அனுமானங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். ஐ.நா. சபை ஏற்றுக்கொண்ட, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம் விஐடி-யில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையம் உள்ளூர் முதல் உலக அளவிலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குப் புதுமையான தொழில்நுட்பங்கள், நிலையான தீர்வுகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது. தேசிய, சர்வதேச ஆராய்ச்சி நெட்வொர்க்குகள் மற்றும் அரசு, தொழிற்துறை, அரசு சாரா நிறுவனங்கள், முன்னணி கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம் சுற்றுச்சூழல் இடர்ப்பாடுகளை இந்த மையம் நிவர்த்தி செய்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in