

சென்னை: கோடை காலத்தை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - மேற்கு வங்கம் மாநிலம் சந்திரகாச்சி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்திலிருந்து மே 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) மதியம் 1 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் இரவு 9.20 மணிக்கு மேற்கு வங்கம் மாநிலம் சந்திரகாச்சியை அடையும்.
மறுமார்க்கமாக, மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சியில் இருந்து மே 9, 16, 23, 30 ஆகியதேதிகளில் (வியாழக்கிழமைகளில்) இரவு 11.40 மணிக்கு சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 9.45மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து மே 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில் ) மதியம் 1 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06095) புறப்பட்டு, மறுநாள் இரவு 9.20 மணிக்கு சந்திரகாச்சியை அடையும்.
மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து மே 10, 17, 24, 31ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 11.40 மணிக்குவாராந்திர சிறப்பு ரயில் (06096) புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த சிறப்புரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.