Published : 01 May 2024 04:10 AM
Last Updated : 01 May 2024 04:10 AM

செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை: செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் சேவையை 2 மாதங்களுக்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது‌. அதன்படி செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ( வண்டி எண். 07695 ) மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய புதன் கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் ( வண்டி எண். 07696 ) மே 3, 10, 17, 24, 31,ஜுன் 7, 14, 21, 28 ஆகிய வெள்ளிக் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப் புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தென்மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x