Published : 30 Apr 2024 05:38 AM
Last Updated : 30 Apr 2024 05:38 AM
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கிணற்றில் நீச்சல் மூழ்கிதாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பவித்ரா (30), குழந்தைகள் ரித்திக்(9), நித்திகாஸ்ரீ(7). கோடை விடுமுறையொயொட்டி குழந்தைகளுக்கு நீச்சல் பழகுவதற்காக, பவித்ரா, தனது 2 குழந்தைகளையும் வீட்டுக்கு அருகேயுள்ள விவசாய கிணற்றுக்கு நேற்று அழைத்துச் சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது, கிணற்றில் மூவரது சடலங்களும் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்கலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT