சென்னையில் 4 விமான சேவை ரத்து

சென்னையில் 4 விமான சேவை ரத்து
Updated on
1 min read

சென்னை: அகமதாபாத்தில் புறப்பட்ட விமானம், தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று காலை 184 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கு புறப்பட்டது. விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானம் சென்னை வந்துவிட்டு, காலை 8.45 மணிக்கு ஐதராபாத் செல்லும்.

மாலை 6.15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்துவிட்டு, இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு செல்லும். அகமதாபாத்தில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in