

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடத்திலும், வெளிநாட்டினர் வருகையில் 2-ம் இடத்திலும் தமிழகம் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் செவ் வாய்க்கிழமை நடந்த சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது:
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்காண்டிநேவியா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் தமிழகத்துக்கு வருகின் றனர். உலகளவில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தமிழகம் விளங்குகிறது.
கடந்த ஆண்டில் நேரடியாக வும் மறைமுகமாகவும் 7.6 சதவீத வேலை வாய்ப்புகளை சுற்றுலாத்துறை அளித்துள்ளது. அண்மைக்காலங்களில் மருத் துவச் சுற்றுலாவிலும் உடல் நலம் பேணும் சுற்றுலாவிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகி றது. 2013-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளது. மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
தமிழகத்துக்கு வரும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு 39.90 லட்சமாக உள்ளது. இதை 2023-ம் ஆண்டில் 1.5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, விடுதிகளில் தங்குவ தற்கும் பயணங்கள் மேற்கொள் வதற்கும் செல்போன் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டில் ரூ.7.76 கோடி வருவாய் ஈட்ட முடிந்தது. இது முந்தைய ஆண்டைவிட 45 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.