Published : 28 Apr 2024 04:00 AM
Last Updated : 28 Apr 2024 04:00 AM

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு மற்றும் வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு, வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு போன்ற நடவடிக்கைகளில் தெற்கு ரயில்வே ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வியாழக் கிழமைகளில் இயக்கப் படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06067 ) மே 2-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்படும். நாகர்கோவில் – சென்னை எழும்பூருக்கு வியாழக் கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06068 ) மே 5-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் – நாகர்கோவிலுக்கு வெள்ளி,சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06057 ) மே 3-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் நாகர்கோவில் – எழும்பூருக்கு வெள்ளி, சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத்சிறப்பு ரயில் ( 06058 ) மே 3-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x