Published : 26 Apr 2024 05:05 AM
Last Updated : 26 Apr 2024 05:05 AM
ஈரோடு: கோவை கார் குண்டு வெடிப்புதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதிகளில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, கடம்பூர் மலைப் பகுதியை அடுத்த சின்னசாலட்டி கிராமத்தில் வசிக்கும்ஆடு விற்பனைத் தரகர் குப்புசாமியிடம்(65) என்ஐஏ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் குப்புசாமியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை குண்டு வெடிப்புவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை முறை மலைப்பகுதிக்கு வந்தனர், வனப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்துள்ளது. மீண்டும் அடுத்த வாரம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT