ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழி பாதையாக மாற்றம் @ சென்னை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தில் 4-வது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று ( 26-ம் தேதி ) இரவு 10 மணி முதல் 3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அதன் விவரம்: ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் ( போர் நினைவிடம் நோக்கி ) அனுமதிக்கப் படாது.

அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை அணுகு சாலை - வடக்கு கோட்டை சாலை - முத்துசாமி சாலை - முத்துசாமி பாலம் - வாலாஜா பாயின்ட் - கொடிமரச் சாலை - போர் நினைவுச் சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம். காமராஜர் சாலையிலிருந்து பாரி முனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும். இவ்வாறு போக்கு வரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in