ரஷ்ய தூதரகத்தின் மேலே பறந்த ட்ரோனால் பரபரப்பு @ சென்னை

ரஷ்ய தூதரகத்தின் மேலே பறந்த ட்ரோனால் பரபரப்பு @ சென்னை
Updated on
1 min read

சென்னை: சாந்தோம் நெடுஞ்சாலையில் ரஷ்யா நாட்டுக்கான தூதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ட்ரோன் ஒன்று வட்டமடித்தது. இதைக்கண்டு ரஷ்யத் தூதரக அலுவலக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து சந்தேகத்துக் குரிய ட்ரோனை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பின்னர், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், தூதரகத்தின் எதிரே உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்ததும், அப்போது, ட்ரோன் திசை மாறி ரஷ்யத் தூதரக அலுவலகம் மேற்பரப்பில் பறந்ததும் தெரியவந்தது.

மேலும், அந்த ட்ரோனை பறக்க விட்ட கல்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் ( 23 ) என்பவர் சொந்தமாக ட்ரோன் வைத்திருப்பதும், இவர் திருமணங்களுக்கு வீடியோ எடுக்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. உண்மையாகவே ட்ரோன் தவறுதலாகப் பறந்ததா, வேறு காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in